பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டிற்கான வேலை ஆரம்ப நிகழ்வுகள் 2020.01.01
மலர்ந்திருக்கும் 2020ஆம் ஆண்டினை வரவேற்று அலுவலக கடைமைகளை ஆரம்பிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களினால் அரசாங்க சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் புதுவருட ஒன்றுகூடலின் போது தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் அரச நிறுவனங்களிடையே நடாத்தப்பட்ட போட்டியில் 3ம் இடத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டமைக்காக அதற்காக அயராது பாடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைகளை பாராட்டும் வைபவம், தாங்கள் ஆற்றிய சேவைகளுக்காக மாதாந்தம் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களை பாராட்டும் வைபவம், சமூக பாதுகாப்பு நிதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை இணைப்பு செய்தவர்களை பாராட்டும் வைபவம் என்பன பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றது.
புதுவருட கடைமைகளை ஆரம்பிக்கும் பொருட்டு ' விசேட மரநடுகை வேலைத்திட்டமானது இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.




