மனைப்பொருளாதார போசனையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் 2020/2021 பெரும்போகம் - 26.10.2020
ஜனாதிபதி செயலணி மூலம் மனைப்பொருளாதார போசணையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மனை அலகுகளுக்கான மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளார் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி எருவில் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுக்கு இணைப்புச் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டு கன்றுகளை வழங்கி வைத்தனர்.





