"வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" எண்ணக்கருவின் கீழ் “ துருலிய லங்கா” தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு 2020.11.06 அன்று எமது மதிற்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பெரிய குளம் அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி, வட்ட விதானையார் மற்றும் பட்டதாரி பயிலுனர் போன்றோர் பங்குபற்றினர்.
கிராம உத்தியோகத்தர் தலைமையில் பட்டதாரி பயிலுனர்கள் ஒத்துழைப்புடன் 800 பனைமரக்கன்றுகள் பெரிய குளம் அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பித்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை வரை நடப்பட்டது.




