இரத்த தான முகாம் 2021

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் 02.12.2021 அன்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்னம் தலைமையில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கம் வருடாந்தம் இவ் இரத்ததான முகாமை நடாத்தி வருகின்றது .இம்முறை நலன்புரிச்சங்கமும் தேசிய இ;ளைஞர் சேவை மன்றமும் இணைந்து இம் முகாமை சிறப்பாக நடாத்தியிருந்தனர். பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் நான்காவது இரத்ததான முகாமாக இது நடைபெறுகின்றது. 2018ம் ஆண்டில் இருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் இணைந்து ஆரம்பித்த இவ் இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் முப்படையினர் என 150 இற்கும் மேற்பட்டோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இரத்த கொடையாளர்களாக பங்கேற்றிருந்தனர். மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இரத்த நன்கொடையாளர்களின் உடல் உள நலன்களை பரிசோதனை செய்து இரத்ததானத்தை பெற்றுக் கொண்டனர்.