திரைவித்யா “ கல்வித்திட்டத்தின் மூலம்  Smart TV களினை வழங்கிவைக்கும் நிகழ்வு – 2021.01.13
IMG 20210113 WA0018
வளர்ந்துவரும் நவீன காலத்திற்கு ஏற்றாற்போன்று கற்றல் செயற்படுகள் செயற்படுத்தப்பட்டு வருவதினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடைபட்டதொன்றாகவே காணப்படுகின்றது. கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குரிய களமொன்று COVID 19 நோய்த் தொற்று காரணமாக இல்லாமல் ஆக்கப்பட்டதெனலாம்.
 
கடந்த காலங்களில் மாணவர்கள் பாடசாலைகளில் கற்பதோடு பிரத்தியோக வகுப்புகளுக்கும் சென்று தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து எதிர்காலத்துக்கு ஏற்றதான பயணத்தை தொடர்ந்திருந்தனர் எனினும் அவை தற்கல சூழ்நிலையில் தொடரமுடியாத பயணமாகவுள்ளது.
 
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்படுகளை இலகுவாக்குவதற்கும் அவர்களது அறிவு, திறன், மனப்பாங்குகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் மேலதிக வகுப்புகளுக்கு செல்லாத மாணவர்களின் கல்வி தரத்தினை மேலோங்க வைக்கும் முயற்சியுடனும் பாடசாலைகளிலே தொலைக்காட்சி கல்வியினை நடைமுறைப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
 
தொலைக்காட்சி கல்வியினூடே மாணவர்கள் மேலதிக வகுப்புக்களின் மூலமாக பெறக்கூடிய கற்றலினை ஈடு செய்ய பிரபல்யமான பாடசாலைகளில் இடம்பெறும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை Online System மூலம் வழங்கும் நோக்குடன் பட்டிருப்பு கல்வி வலயத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 17 பாடசாலைகளுக்கு “ திரைவித்யா “ கல்வித்திட்டத்தின் மூலம்  Smart TV களினை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (2021.01.13) பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இன்று எமது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.ந.தனஞ்சயன், காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன் மற்றும் பட்டிருப்பு வலய உதவிக் கல்வி  பணிப்பாளர், எமது பிரதேச செயலக கிராக அபிவிருத்தி உத்தியோகத்தர், அதிபர்கள், மாதர்/கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
IMG 20210113 WA0005IMG 20210113 WA0016IMG 20210113 WA0017IMG 20210113 WA0020
கற்பித்தல் செயற்பாடுகளானவை எவ்வாறு செயற்படுத்தப்படல் வேண்டும் மற்றும் இச் செயற்பாடுகளினூடே மாணவர்கள் பெறும் பயன்கள் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. உரிய வகையில் உபகரணங்களை கையாண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையிலே பயன்படுத்துவதே இத்திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் செயற்பாடாக அமையும் என்பதினால் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் பாடசாலைகளின் செயற்பாடுகள் அமையப்பெறல் வேண்டும்.
IMG 20210113 WA0014
மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் மீது அதிக ஈடுபாட்டினை ஏற்படுத்த முயலும் இத் தொலைக்காட்சி முறையூடான கற்பித்தல் முறையானது  முறையான ஒழுங்கில் கற்பிக்கப்படும்போது “ திரைவித்யா “ கல்வி திட்டத்தின் வெற்றி நாட்டின்  கற்பித்தல் செயற்பாட்டிலே புதியதொரு மாற்றத்தை கொண்டுவருமெனலாம்.
IMG 20210113 WA0006IMG 20210113 WA0007IMG 20210113 WA0012IMG 20210113 WA0010
 
News & Events

14
ජූනි2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ජූනි2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
මැයි2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
නොවැ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
ජූනි2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
අප්‍රේ2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
මාර්2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top