அளிப்பு பின்னுருத்து செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பக் கடிதம் (கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- அளிப்புப் பத்திரம் (மூலப்பிரதி)
- வரலாற்றுத்தாள் (கச்சேரியில் எடுக்கப்படல் வேண்டும்)
- பின்னுருத்தாளியின் பிறப்புப்பதிவு
அளிப்புப்பத்திரம் அடுத்துரிமை செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பக் கடிதம் (கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- அளிப்பு பத்திரம் (மூலப்பிரதி)
- வரலாற்றுத்தாள் (கச்சேரியில் எடுக்க வேண்டும்)
- அளிப்பு உரிமையாளரின் மரணப்பதிவு
- அடுத்துரிமை பெறுபவரின் பிறப்புப்பதிவு, தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி (கணவன் / மனைவியாயின் திருமணப்பதிவு)
- அளிப்பு உரிமையாளரின் மனைவி / பிள்ளைகளின் சம்மதக்கடிதம்
அளிப்பு உரிமைமாற்றம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
- விண்ணப்ப கடிதம் (கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- அளிப்புப் பத்திரம் (மூலப்பிரதி)
- அளிப்பு உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்பிரதி
- உரிமைமாற்றம் பெறுபவரின் பிறப்புப்பதிவு, தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்ட்ட நிழற்பிரதி,
- வரலாற்றுத்தாள் (கச்சேரியில் எடுக்க வேண்டும்)
- காணியை முழுமையாக உரிமைமாற்றம் செய்வதாயின் அளிப்பு உரிமையாளரின் பெயரில் உள்ள வேறு காணிக்கான ஆவணங்கள்
காணி உத்தரவுப் பத்திரம் பின்னுருத்து செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்
- விண்ணப்ப கடிதம் (கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- உத்தரவுப் பத்திரம் (மூலப்பிரதி)
- உத்தரவுப் பத்திர உரிமையாளரின் பிறப்புப்பதிவு, தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி
- பின்னுருத்தாளியின் பிறப்புப்பதிவு, தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி
உத்தரவுப்பத்திர பிரதி வழங்குவதற்குத் தேவையான ஆவணங்கள்
- விண்ணப்பக் கடிதம் (கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்)
- ரூபா. 10 முத்திரை
- ரூபா. 10 பணம் கட்டிய பற்றுச்சீட்டு