🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் பங்களிப்புடன் இன்று (10.06.2026) துறைநீலாவணை மாரியம்மன் வளாகத்தில் இடம்பெற்றது.
🍃 இதன் போது உதவி பிரதேச செயலாளரினால் "பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது.
🍃 இந்தநிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாகத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
🍃 இந்த சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டங்களை முன்னிட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் மரநடுகை நிகழ்வுகள் என்பனவும் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் " நிகழ்வின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு பிரதேச செயலாளர் திரு உ. உதயஶ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.06.2026) மகிழுர்முனை மண்டபத்தடி வலம்புரி ஆலயத்துக்கு அருகாமையில் இடம் பெற்றது.
💥 இலங்கையின் பல்பரிமாண வறுமையினை ஒழிக்கும் பொருட்டு 25000 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிராமிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
💥 இந்த திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்கு 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், மகிழூர்முனை விவசாய வீதி 8.25 மில்லியன் ரூபா பெறுமதியில் கொங்கிறீட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.
💥 மேலும் குருமண்வெளி 11 கிழக்கு, களுதாவளை 04 சாந்திபுரம் மற்றும் தேற்றாத்தீவு தெற்கு கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 03 வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் செப்பனிடப்படவுள்ளது.
💥 இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ மே. வினோராஜ், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. செ பிரபாகரன், பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி குழு தலைவர்கள், மகிழூர் கிராம சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
💥 மேலும் நிகழ்வின் இறுதியில் மண்டபத்தடி வலம்புரி பிள்ளையார் ஆலய வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024
💎 21.04.2024 எருவில் தெற்கு கிராம உத்தியோகத்த பிரிவில் கோடைமேடு கிராமத்தில் உத்தியோகபூர்வமாக அரிசி விநியோகம் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக திரு பூ. பிரசாந்தன் கலந்து கொண்டார். 15748 குடும்பங்கள் பயன்பெறவுள்ள இத்திட்டத்தில் 29.9 மில்லியன் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான தேசிய நிகழ்வுக்கு சமாந்தரமாக இந் நிகழ்வு ஒழுங்மைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







