2022ஆம் ஆண்டின் அலுவலக கடமைகளை ஆரம்பித்தலும் உத்தியோகத்தர்களை  பாராட்டும் நிகழ்வும்
 
மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
 
தேசியக்கொடியேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசிய கீதமானது உத்தியோகத்தர்களினால் இசைக்கப்பட்டதனை தொடர்ந்து மத இறைவணக்கமும் நிகழ்த்தப்பட்டது. முப் படையினர் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக 02 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியபிரமாணம் செய்ததோடு தமது புதிய வருடத்திற்கான கடமைப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
 
WhatsApp Image 2022 01 07 at 13.03.26 3             WhatsApp Image 2022 01 03 at 19.37.51 1               WhatsApp Image 2022 01 03 at 19.37.53                                      WhatsApp Image 2022 01 03 at 19.37.51   
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாததார பரிசோதகரினால் கொவிட்-19 தொற்றுப்பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்குள்ள பொறுப்புக்களை வலியுறுத்தி சிறிய உரையொன்று நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேசசெயலாளரின் புத்தாண்டு வாழ்த்து அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதோடு கடந்த வருடத்தில் வினைத்திறனான செயற்பாடுகளை எமது உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விதம் பற்;றி கூறியதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.மக்களுக்காக சேவை வழங்கும் வினைத்திறனான சேவையின் அவசியம் இவ் வருடமும் தேவையென்பதால் அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது பணியினை திறன் பட முன்னெடுக்க வேண்டுமெனவும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் 'நீலப்பசுமை' எதிர்பார்ப்பினை நிவர்த்தி செய்ய வினைத்திறனாகவும் நேர்மையாகவும் விரைவாகவும் செயற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேசசெயலாளர் தமது கருத்துரையை முன் வைத்தார். 
 
WhatsApp Image 2022 01 07 at 13.02.32 4          WhatsApp Image 2022 01 03 at 19.37.53 1       WhatsApp Image 2022 01 03 at 19.37.55           WhatsApp Image 2022 01 03 at 19.37.57 1       WhatsApp Image 2022 01 03 at 19.37.58         WhatsApp Image 2022 01 07 at 13.03.26
கடந்த வருடத்தில் பிரதேச செயலகத்தின் வெற்றிப்பயணத்திற்காக முன்னின்று உழைத்த மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
 
WhatsApp Image 2022 01 03 at 19.37.56                                                                                         WhatsApp Image 2022 01 03 at 19.37.57
 
இறுதி நிகழ்வாக அலுவலக வளாகத்தில் மரநடுகை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறும்பட பயிற்சிப்பட்டறை 2021
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்இ மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய குறும்பட பயிற்சிப்பட்டறை 04.12.2021 அன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. 
WhatsApp Image 2021 12 14 at 14.11.53
 
பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாணப்பணிப்பாளர் திரு.ச.நவநீதன் அவர்கள் கலந்து கொண்டார்கள். 
WhatsApp Image 2021 12 14 at 14.12.39
 
அத்துடன் இந்த பயிற்சிப்பட்டறையில் பிரதேச செயலகப் பிரிவில் குறும்பட தயாரிப்பில் ஆர்வமுள்ள இளைஞர்யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர். பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.ராதிகா கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பயிற்சி பட்டறையில் வளவாளராக திரு.அனந்தராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார் 
 
இரத்த தான முகாம் 2021
 
WhatsApp Image 2021 12 14 at 14.13.42

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் 02.12.2021 அன்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்னம் தலைமையில் நடைபெற்றது.
 WhatsApp Image 2021 12 14 at 14.14.35
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கம் வருடாந்தம் இவ் இரத்ததான முகாமை நடாத்தி வருகின்றது .இம்முறை நலன்புரிச்சங்கமும் தேசிய இ;ளைஞர் சேவை மன்றமும் இணைந்து இம் முகாமை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.  பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் நான்காவது இரத்ததான முகாமாக இது நடைபெறுகின்றது. 2018ம் ஆண்டில் இருந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்இ ஊழியர்கள் இணைந்து ஆரம்பித்த இவ் இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.
 
வியாழக்கிழமை நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் முப்படையினர் என 150 இற்கும் மேற்பட்டோர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இரத்த கொடையாளர்களாக பங்கேற்றிருந்தனர். மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் இரத்த நன்கொடையாளர்களின் உடல் உள நலன்களை பரிசோதனை செய்து இரத்ததானத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு 2021
 
WhatsApp Image 2021 12 14 at 14.10.45
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு 04.12.2021 அன்று  பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இங்கு ஆன்மீக அதிதியாகவும் வளவாளராகவும் இராமகிருஸ்ண மிஸன் ஸ்ரீமத்சுவாமி தஷஜானந்தர் கலந்து கொண்டார்.
 
 WhatsApp Image 2021 12 14 at 14.11.20
அத்துடன் வளவாளராக அம்பாறை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பத்மகுமார் எழில்வாணி குமுதினி பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்;குட்பட்ட அறநெறிப் பாடசாலைகள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அறநெறிப் பாடசாலைகள் ஆகியவற்றின் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

👉பல்கலைக்கழக மாணவிக்கு ரூபாய் 8000.00 வீதம் 12 மாதங்களுக்கு வைப்பு செய்யப்படும். 

👉 ஒரு குடும்பத்தில் கல்வி கற்கும் 2 பாடசாலை மாணவர்களுக்கு ரூபா 5000.00  வீதம் 12 மாதங்களுக்கு இருவருக்கும் வைப்பு செய்யப்படும்.

இக் கல்வி மேம்பாட்டு கொடுப்பனவுக்கான முதற்கட்ட காசோலைகள்  13.05.2026 ஆம் திகதியன்று மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் அவர்களினால் குறித்த மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

News & Events

14
ජූනි2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ජූනි2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
මැයි2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
නොවැ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
ජූනි2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
අප්‍රේ2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
මාර්2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top