இளைஞர் யுவதிகளை இராணுவ சேவையில் இணைப்பதற்கான நேர்முகப்பரீட்சை !!! - 2020.11.17
125510156 839167703585003 7781781686077591573 o
இலங்கை இராணுவ சேவைக்கு இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ளும் பொருட்டு மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான நேர்முகப்பரீட்சை செவ்வாய்க்கிழமை (17.11.2020) தொடக்கம் வெள்ளிக்கிழமை (20.11.2020) வரை மு.ப 8.00 - பி.ப 6.00 வரை பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஆண் (வயதெல்லை 18 - 24), பெண் (வயதெல்லை 18 - 22) கீழ்வரும் ஆவணங்களுடன் சமூகமளிக்க முடியும்.
* தேசிய அடையாள அட்டையின் பிரதி
* பிறப்பு சான்றிதழ்
* கல்வி சான்றிதழ்கள்
* விளையாட்டு சான்றிதழ்கள்
* குணநல சான்றிதழ் 02
* கிராம சேவகர் சான்றிதழ்
* பொலிஸ் சான்றிதழ்
 
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான பொருத்தமான தொழிற்துறைகளை தேர்வு செய்வதற்கான செயலமர்வு - 2020.11.13
 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் "சுபீட்சத்தின் நோக்கு" எண்ணக்கருவிற்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில் பிரதேச செயலக பிரிவில் முதற் கட்டமாக நியமனங்களை பெற்றுக் கொண்ட 17 பயிலுனர்களுக்கான பயிற்சிகளின் பொருத்தமான தொழிலை தேர்வு செய்வதற்கான செயலமர்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
 
இத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள துறைகளில் தமது தகுதி மற்றும் திறமை ஆகியவற்றை கொண்டு தமக்கு பொருத்தமான துறையினை எவ்வாறு தெரிவு செய்தல் மற்றும் online ஊடக பதிவுகளை மேற்கொள்ளல் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
 
பயிலுனர்கள் தங்களுக்கு  எவ்வாறான தொழிற்துறை சார் பயிற்சிகள் தேவை என்பதனை தாங்கள் எவ்வாறு தெரிவு செய்வது என்பதற்கான ஒரு திறனான தெளிவுபடுத்தல் பிரதேச செயலாளரினால் பயிலுனர்களுக்கு வழங்கப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.
 
124922920 837663693735404 5322588312434566258 o 124936871 837663870402053 6529659568228428842 o 125071703 837663833735390 9173762677208965238 o
 
125378858 837663573735416 3951430465164980946 o 125183615 837663757068731 8419606575217141817 o 124605393 837663667068740 8679405732871392374 o
 
பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கொரோணா செயலணி தொடர்பான கலந்துரையாடல். 2020.10.27

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா நோய்த்தொற்று காரணமாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதேச கொரோணா செயலணி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோணா நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தொற்றுப்பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , சனநடமாட்டம் அதிகமான இடங்களை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில் உதவிப்பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், கிராம உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகள் பேணப்படல் வேண்டும் எனவும் தவறுபவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துதல் மற்றும் ஆலயங்களில் பூசை வழிபாடுகளின்போது மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

122724087 822607491907691 5252294392614587189 n

122874233 822607508574356 8246305277326680336 n

“ துருலிய லங்கா” தேசிய மர நடுகை வேலைத்திட்டம் - (06.11.2020) "
""மரங்கள் பூமியின் ஆடைகள் அவை சரிகின்ற ஒவ்வொரு போதும் பூமித்தாய் துகிலுரியப்படுகிறாள்...... மரங்கள் வருண தேவனுக்கு பூமி காட்டும் பச்சைக்கொடிகள்...... மானுடத்தின் பாவம் தீர்க்கவென்றே பிறப்பெடுத்த புண்ணிய வதிகள்.............. மலர்கள் பூமிப்பெண் அணிந்த ஆபரணங்கள் வீசும் காற்றினை மூச்சுக் காற்றாக மாற்ற ஓயாது உழைக்கும் விஞ்ஞானிகள்...... சொல்லிவிடுங்கள்! மரங்களின் மகத்துவம் சொல்லிவிடுங்கள்!! மழையின் தாய் மரங்கள் என்பதை........ காற்றின் இருதயம் இலைகள் என்பதை........ உரத்துச் சொல்லுங்கள் மனிதனே மரங்களை வெட்டாதே! உன் கோடாரியின் ஒவ்வொரு சுழற்ச்சியும் வருங்கால வம்சத்தின் கல்லறைக்கு கடைக்கால் ::: மரங்களை வாழ வை! மனிதனே ::: ....மனிதரையும் வாழ வை.... காற்றில்லாமல் உயிர்களில்லை... கரைகளில்லாமல் நதிகளில்லை... மரங்களில்லாமல் மனிதன் இல்லை""

123284871 831163097718797 1624325419060567312 o"வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" எண்ணக்கருவின் கீழ் “ துருலிய லங்கா” தேசிய மர நடுகை வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு 2020.11.06 அன்று எமது மதிற்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பெரிய குளம் அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி, வட்ட விதானையார் மற்றும் பட்டதாரி பயிலுனர் போன்றோர் பங்குபற்றினர்.

கிராம உத்தியோகத்தர் தலைமையில் பட்டதாரி பயிலுனர்கள் ஒத்துழைப்புடன் 800 பனைமரக்கன்றுகள் பெரிய குளம் அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆரம்பித்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை வரை நடப்பட்டது. 

 123585435 831162517718855 5233689877208446573 o 123507563 831162471052193 5882414890370880643 o 123605834 831163924385381 1213176588796674620 o 123513415 831163281052112 334240428332210121 o 123385433 831163671052073 3961555813090526900 o 123284871 831163097718797 1624325419060567312 o 123939167 831163254385448 3817639247548494554 o

மனைப்பொருளாதார போசனையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் 2020/2021 பெரும்போகம் - 26.10.2020

ஜனாதிபதி செயலணி மூலம் மனைப்பொருளாதார போசணையினை மேம்படுத்தி குடும்ப அலகினை வலுவூட்டும் தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மனை அலகுகளுக்கான மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளார் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் களுவாஞ்சிகுடி எருவில் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவுக்கு இணைப்புச் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் கலந்து கொண்டு கன்றுகளை வழங்கி வைத்தனர்.

122729236 822704298564677 1842096289284998837 n122484278 822704271898013 6405802713135477276 n

News & Events

14
ජූනි2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ජූනි2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
මැයි2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
නොවැ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
ජූනි2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
අප්‍රේ2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
මාර්2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top