தொழிற் கல்வியை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன......

 apply now

இன்றைய இலங்கையில் போட்டிபோட்டு கொண்டு தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக்கொள்வது குதிரை கொம்பாகவே மாறியிருக்கிறது. பலரும் இந்த தொழில் போட்டிக்குள்தான் தங்கள் வாழ்க்கையையும், திறமைகளையும் தொலைத்துக் கொள்கிறார்கள். இதற்குப் பிரதான காரணமே, தமக்கென ஒரு தொழில் முயற்சியை தொடங்குவதில் உள்ள தயக்கமும், அது தொடர்பில் சவால்களை எதிர்கொள்ளும் துணிவின்மை நிலையுமே ஆகும். தெழிற் கல்வியொன்றை நாம் கற்போமானால் இவ்வாறனதொரு நிலை எமக்கு ஏற்படாது.

எனவே உங்களுக்கான தொழிற்கல்வியை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்......

இன்றே விண்ணப்பியுங்கள்....

 

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் 2021ம் ஆண்டில் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிகளின் விபரம்.

20201207 132129 50

 

தொழிற்பயிற்சி நிலையம், கடற்கரை வீதி, ஓந்தாச்சிமடம் நிலையத்தில்.....

  1. தேசிய சான்றிதழ் - மோட்டார் சைக்கிள் திருத்துனர்

           (National Certificate in Motor Cycle Machanic) – NVQ Level – IV (6 Months)

  1. தேசிய சான்றிதழ் – உருக்கி ஒட்டுனர்

           (National Certificate in welder) – NVQ Level - III (6 Months)

  1. தேசிய சான்றிதழ் – தையலாளர் (பெண்கள்)

           (National Certificate in Tailer – Lidies) – NVQ Level - IV (6 Months)

போன்ற பயிற்சி நெறிகளும்…..

 

தொழிற்பயிற்சி நிலையம், அற்புத பிள்ளையார் கோவில் வீதி, களுவாஞ்சிகுடி நிலையத்தில்.....

  1. தேசிய சான்றிதழ் – நீர் குழாய் பொருத்துனர்

           (National Certificate in plumber) – NVQ Level - III (6 Months)

  1. தேசிய சான்றிதழ் – வீட்டு மின் இணைப்பாளர்

           (National Certificate in Electrician – Domostic) – NVQ Level - III (6 Months)

  1. தேசிய சான்றிதழ் – சிகை அலங்கரிப்பாளர்

           (National Certificate in Beautician & Hairstylist) – NVQ Level - III (8 Months)

  1. தேசிய சான்றிதழ் – தையலாளர்

           (National Certificate in Tailor – Gents & Ladies) – NVQ Level - IV (6 Months)

  1. தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பம்

           (Information & Communication Technology – ICTT) – NVQ Level - IV (6 Months)

  1. தேசிய சான்றிதழ் – வெதுப்புனர்

           (National Certificate in in Baker) – NVQ Level - III (6 Months)

  1. தேசிய சான்றிதழ் – அலுமினியம் பொருத்துனர்

           (National Certificate in Aluminum Fabricator) – NVQ Level - III (6 Months)

போன்ற பயிற்சி நெறிகளும் வழங்கப்படுகின்றன.

எனவே தொழிலொன்றை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகள் உடனே விண்ணப்பியுங்கள்.

20201207 132327    20201207 132406

2021.01.10ம் திகதிக்கு முன்னர் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்... நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ உங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.......

விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்.

Online மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிக்க இங்கே Click செய்யவும்.

 

தொடர்புகளுக்கு....

தொழிற்பயிற்சி நிலையம்,

கடற்கரை வீதி,

ஓந்தாச்சிமடம்.

0710318797, 0652053571

 

தொழிற்பயிற்சி நிலையம்,

அற்புத பிள்ளையார் கோவில் வீதி,

களுவாஞ்சிகுடி.

0779774222, 0710318796, 0652053573

 

தகவல்

பிரதேச செயலாளர்

பிரதேச செயலகம்

மண்முனை தென் எருவில் பற்று

களுவாஞ்சிகுடி

சீரற்ற காலநிலையினை எதிர்கொள்வது தொடர்பான

அவசர மற்றும் விசேட கூட்டம் - 2020.12.02

hurri ne

மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக அவசர மற்றும் விசேட கூட்டமானது இன்று (2020.12.02) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம் பெற்றது.

20201202 095334 50 49

இக் கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள், உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினை எவ்வாறு எதிர் கொள்வது, பொது மக்களுக்கு எவ்வாறான அறிவுறுத்தல்களை வழங்குவது, எவ்வாறான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தெடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

20201202 101005 50 50           20201202 100935 50 33           20201202 100847 50 44              20201202 095410 50 39                                                                                                 20201202 095311 50 45             20201202 095212 50 45

           

Covid 19  சூழ்நிலையும் அபாயமானதொன்றாக காணப்படுகின்ற காரணத்தினால் சீரற்ற காலநிலையின்போது பொதுமக்களை ஒன்றாக கூட்டமாக ஒருங்கிணைத்து பாதுகாக்கின்ற நிலைமையானது பாரியதொரு சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் மக்கள் தங்களைத் தாமே பாதுகாப்பதற்கும் அனர்த்த சூழலை எதிர் கொள்வதற்கும் எவ்வாறான செயற்பாடுகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என்பது தொடர்பான தீர்மானமிக்க பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த வகையில்,

  1. சூறாவளிக்கு முன்னரான முன்னாயத்தங்களாக பொது மக்கள் வீட்டுக்கூரை, சுவர் என்பன உறுதியானவையா என்பதனை சரிபார்த்துக் கொள்வதோடு உறுதியற்றதாக காணப்படும் சந்தர்ப்பத்தில் உறுதியான கட்டிடங்களுள்ள உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு செல்வது பொருத்தமானது .
  2. வீட்டுக்கு வெளியே உயரமான மரங்கள் காணப்படின் அவற்றினை வெட்டி அகற்றுவதானது பாதுகாப்பானதொரு நடவடிக்கையாகும்.
  3. கடல் கொந்தளிப்பு, வெள்ளப்பெருக்கு போன்ற சூழ்நிலைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் கடலுக்கு அருகாமையில், தாழ்வான பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு சென்று பாதுகாப்பு பெறுதலே சிறந்தது.
  4. தூய தண்ணீரை தூக்கிச் செல்லக்கூடிய கொள்கலன்களில் சேமித்து வைத்துக்கொள்வதென்பது மிகவும் அவசியமானதொன்றாக காணப்படுவதினால் அனைவரும் அதனை பின்பற்றவேண்டிய தேவை உள்ளது.
  5. மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகள், உபகரணங்கள் போன்றவற்றை கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 50 மீட்டர் தூரத்துக்கு அப்பால் சென்று பாதுகாப்பாக வைத்துக்கொள்வதானது சிறந்ததொரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
  6. சூறாவளி வீச ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்களில் சகலவித மின்சார தொடர்புகளையும் துண்டித்து விடுவதானது மின்சாரத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைக்க ஏதுவானதாக அமையும்.
  7. பெறுமதியான பொருட்கள், ஆவணங்கள் போன்றவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதானது பெறுமதியான பெருள் இழப்புக்களை குறைக்க ஏதுவானதாக அமையும்.
  8. காற்று வேகமாக வீசும்போது வீட்டின் கதவு, யன்னல்களை திறந்து வைப்பதானது வீட்டுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பினை குறைத்துக் கொள்ள ஏதுவானதொன்றாக அமையும்.
  9. குழந்தைகள், வயோதிபர்கள், விசேட தேவையுடையவர்களை முற்கூட்டியே பாதுகாப்பானதொரு அமைவிடத்தில் அமர்த்திவைப்பது சிறந்ததொரு செயற்பாடாகும்.
  10. அபாய வலயத்திற்குள் உட்பட்டு காணப்படுகின்ற தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினர் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுவதினால் பாதுகாப்பான உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு பாதுபாப்பாக அகன்று செல்வதற்குரிய வழிகள், நேரம் என்பன ஊடகங்களில் அறிவிக்கும் வரை வெளியே செல்லாமல் அவதானத்துடனும் பொறுமையாகவும் வீட்டினுள் இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

மாவட்ட செயலாளரின் அறிவித்தல்... !!!

Registration and stamp duty fees 1

2021 ஆம் ஆண்டிற்கான பொருட்கள் மற்றும் சேவை வழங்குநர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் பதிவுசெய்தல் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்கள் பதிநான்கிற்கும் மாவட்டச்செயலாளரின் மேற்பார்வைக்குட்பட்ட ஏனைய அலுவலகங்களிற்கும் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள், சேவைகள் மற்றும் ஒப்பந்த வழங்கல் வகுதிகளின் கீழ் 2021 ஆம் ஆண்டிற்கான பொருட்கள் மற்றும் சேவை வழங்குனர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களைப் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

20201124 144628

20201124 144656

20201124 144717

News & Events

14
ජූනි2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ජූනි2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
මැයි2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
නොවැ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

News & Events

14
ජූනි2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ජූනි2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
මැයි2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
නොවැ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

11
නොවැ2022
முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் - 2022

முன்பள்ளி மாணவர்களுக்காக யுனிசெப் (UNICEF) நிறுவனத்தினால் ஐப்பசி,  காரத்திகை, ...

29
ජූනි2022

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!அரச அலுவலக சேவைகளில்...

07
අප්‍රේ2022
"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

"பசுமையானதொரு தேசம்"தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச் செய்கை புரட்சி - 2022 ஆரம்ப நிகழ்வு

 நாட்டில் வீட்டுத் தோட்டத்தை மக்களிடையே மேம்படுத்தி பசுமையானதொரு தேசத்தை...

28
මාර්2022
சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு

சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும்...

Scroll To Top